உறவுகள் மாறிக்கொண்டிருக்கின்றன,
பருவங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன,
ஆனால் மனிதனின் பிரிவினைகள் மட்டும் மறாமலிருக்கின்றன!
பிறரைவிட உயர்ந்திருக்க வேண்டும் என்று,
போராடி உயர்ந்து கொண்டே போகின்றான்,
பொறாமை,வஞ்சனைகளும் உயர்ந்து கொண்டேபோகின்றன,
கீழோரைக் கைகொடுத்து முன்கொணர எவரும் இல்லை!
சாதிகள் சொல்கிறார்கள்,
சமயங்கள் சொல்கிறார்கள்,
சாஸ்திரங்கள் பார்க்கிறார்கள்,
சாவினை எவரும் என்றென்று சொல்வார்களா?
மனிதாபிமானம் இல்லாத மனித ஜாதி,
மட்டம் தட்டுதலே அதன் குறி,
மரணத்தின் பின்,
மண் மட்டுமே சொந்தம் என்று தெரிந்தும் ஓயாது அலைகின்றது!
அளவுகடந்த சொத்துடன் ஒரு பிரிவு,
அன்னமே பெறாத ஒரு பிரிவு,
பிணங்களாய் மண்ணில் வீழும் வரை,
பிரிவினைக்கு மட்டும் பிரிவில்லை!
அன்பினை வழங்குங்கள் என்றுதான்,
அனைத்து மதமும் இயம்புகின்றன,
அதனை வளங்கமாட்டீர்,
ஆலயங்களை மட்டும் அமைப்பீரோ!
கதைகள் பல பேசுவார்,
கண்ணால் காணாவிடினும்!
வாழ்நாள் கொஞ்சமே,ஆனால் சேர்த்த,
வஞ்சனைகள் வானை மிஞ்சுமே!
கதைகள் பல பேசுவார்,
கண்ணால் காணாவிடினும்!
வாழ்நாள் கொஞ்சமே,ஆனால் சேர்த்த,
வஞ்சனைகள் வானை மிஞ்சுமே!
என்று மனங்கள் ஒன்றுபட்டு,
மனித இனங்கள் ஒன்றுபடுகின்றனவோ
அன்றுதான் உலகிற்கு
உண்மையான விடியல்!!!......

//என்று மனங்கள் ஒன்றுபட்டு,
ReplyDeleteமனித இனங்கள் ஒன்றுபடுகின்றனவோ
அன்றுதான் உலகிற்கு
உண்மையான விடியல்!!!......//
வாவ்!! அருமையான கவிதை. அதுவும் எனது இணைய வலைப் பூவின் பெயரில(விடியல்) என்னால் முயன்றும் இதுவரை முடியாத ஒன்றை(கவிதை)அருமையாக கையாண்டிருக்கிறீர்கள்.(கவிதையும் ஒரு வரம் தான்).ஆனாலும் உங்கள் எழுத்துப் பிழைகளை திருத்திக் கொள்ளுங்கள்.அது கவிதையையே குலைத்து விடும்.தேடல் தொடர வாழ்த்துகள்
mihavum nanri......
ReplyDeleteungal valinadaththlin padi en pilaihalai thiruththi melum pala padaippukkalai eludukinren:).....