Thursday, November 11, 2010
தேர்தல் கால காளான்கள்!!!
மழைக் கால காளான்கள்
போல்,
தேர்தல் காலத்தில் திடீரெனத் தோன்றும்
அரசியல்வாதிகள்!
அங்கொரு ஒலிபெருக்கி,
இங்கொரு கூட்டம்,
மஞ்சள் சிவப்பென நிறப் பேப்பர்கள்,
தேர்தல் முடிந்தாலும் அள்ளித்தீரா
கஞ்சல்கள்!
கொடிகள் உயரப் பறந்தாலும்,
கொடுத்த வாக்குறிதிகள் ஆழம் பார்க்குமே,
பட்டாசுகள் முழங்கிட,
பகட்டாய்த் திரிவர் மொட்டை வான்களில்!
கதவினைத் திறந்தால்,
கால்களில் மிதிபடும் கோரிக்கைச் சீட்டுக்கள்,
தேர்தல் முடிவின் பின்,
மக்கள் கோரிக்கைகளின் நிலை போல்!
வாக்குறிதிகள் பல,
வாரி வழங்கும் பொருட்கள் பல,
வட்டமாய் கூட்டம் அமைத்து,
வஞ்சனை மொழிவார் எதிர்க்கட்சிகளை!
நகைச்சுவை ஆரம்பம்,
நான் அவனில்லை,
தாருங்கள் ஆட்சியினைப்
பின் பாருங்கள் என் விளை{வினை}யாட்டை!
சேரிகளிட்குச் செல்வார்
தேர்தல் காலங்களில்,
சேற்றிலே முளைத்த செந்தாமரைகள் தான்,
அரசியல்வாதிகளும்!
தேர்தல் முடிந்தபின்,
"நீங்கள் யார்?"
நான் எங்கே இருக்கிறேன்?......
ஆட்சி கை கூடியபின்
ஆட்டம் ஆரம்பம்!
நேர்மைவாதிகளும் உளர்,
உண்மைதான்,
பெரும்பான்மை புல்லருவிகளில்,
சிறுபான்மை பூச்செடிகள்,
என்றாவது பொலிவதுண்டோ!
காலம் ஒரு அரசியல் ஆட்சி,
காணாமல் போன மக்கள் ஆட்சி,
சுயநலமில்லா பொதுநல ஆட்சி
கானல் நீரே,
காணீர் என்றும்!!!......
போல்,
தேர்தல் காலத்தில் திடீரெனத் தோன்றும்
அரசியல்வாதிகள்!
அங்கொரு ஒலிபெருக்கி,
இங்கொரு கூட்டம்,
மஞ்சள் சிவப்பென நிறப் பேப்பர்கள்,
தேர்தல் முடிந்தாலும் அள்ளித்தீரா
கஞ்சல்கள்!
கொடிகள் உயரப் பறந்தாலும்,
கொடுத்த வாக்குறிதிகள் ஆழம் பார்க்குமே,
பட்டாசுகள் முழங்கிட,
பகட்டாய்த் திரிவர் மொட்டை வான்களில்!
கதவினைத் திறந்தால்,
கால்களில் மிதிபடும் கோரிக்கைச் சீட்டுக்கள்,
தேர்தல் முடிவின் பின்,
மக்கள் கோரிக்கைகளின் நிலை போல்!
வாக்குறிதிகள் பல,
வாரி வழங்கும் பொருட்கள் பல,
வட்டமாய் கூட்டம் அமைத்து,
வஞ்சனை மொழிவார் எதிர்க்கட்சிகளை!
நகைச்சுவை ஆரம்பம்,
நான் அவனில்லை,
தாருங்கள் ஆட்சியினைப்
பின் பாருங்கள் என் விளை{வினை}யாட்டை!
சேரிகளிட்குச் செல்வார்
தேர்தல் காலங்களில்,
சேற்றிலே முளைத்த செந்தாமரைகள் தான்,
அரசியல்வாதிகளும்!
தேர்தல் முடிந்தபின்,
"நீங்கள் யார்?"
நான் எங்கே இருக்கிறேன்?......
ஆட்சி கை கூடியபின்
ஆட்டம் ஆரம்பம்!
நேர்மைவாதிகளும் உளர்,
உண்மைதான்,
பெரும்பான்மை புல்லருவிகளில்,
சிறுபான்மை பூச்செடிகள்,
என்றாவது பொலிவதுண்டோ!
காலம் ஒரு அரசியல் ஆட்சி,
காணாமல் போன மக்கள் ஆட்சி,
சுயநலமில்லா பொதுநல ஆட்சி
கானல் நீரே,
காணீர் என்றும்!!!......
Tuesday, November 9, 2010
எழுந்திடு மனிதா!!!......
"எழுந்திடு மனிதா!!!
உயிர்த்திடு,
உயர்ந்திட வழிகள்,
உலகினில் பல...
தோல்விகள் கண்டு துவளாதே,
தோள் கொடுக்கப் பல தோள்கள் உண்டு,
தோல்வியினூடே வெற்றியின் உதயம்!
தவறாதே,
தவறிய பின் கலங்காதே,
தரணியில் பல தடங்களைப் பதி!
பழிகள் சொல்வார்,
பதுங்கிவிடாதே,
பறந்திடு தடைகள் தாண்டி!
கனவுகள் கண்டிடு,அதனைக்
காட்சிகள் ஆக்க,
கருத்துடன் செயற்படு!
உண்மையாய் வாழ்ந்திடு,
உறக்கத்தைக் குறைத்திடு,
உலகினைக் காத்திட உணர்வாய்ச் செயற்படு!
முயன்று முன்னேறு,
முன்னேற்றங்கள் கண்டிடு,
முன்னுதாரணமாய் வாழ்ந்திட முயன்றிடு!,
மனிதா எழுந்திடு!!!.......
உயிர்த்திடு,
உயர்ந்திட வழிகள்,
உலகினில் பல...
தோல்விகள் கண்டு துவளாதே,
தோள் கொடுக்கப் பல தோள்கள் உண்டு,
தோல்வியினூடே வெற்றியின் உதயம்!
தவறாதே,
தவறிய பின் கலங்காதே,
தரணியில் பல தடங்களைப் பதி!
பழிகள் சொல்வார்,
பதுங்கிவிடாதே,
பறந்திடு தடைகள் தாண்டி!
கனவுகள் கண்டிடு,அதனைக்
காட்சிகள் ஆக்க,
கருத்துடன் செயற்படு!
உண்மையாய் வாழ்ந்திடு,
உறக்கத்தைக் குறைத்திடு,
உலகினைக் காத்திட உணர்வாய்ச் செயற்படு!
முயன்று முன்னேறு,
முன்னேற்றங்கள் கண்டிடு,
முன்னுதாரணமாய் வாழ்ந்திட முயன்றிடு!,
மனிதா எழுந்திடு!!!.......
Monday, November 8, 2010
நிழல்கள்
"ஒவ்வொரு உறவும்
உலகினுற்குப் பிரியாவிடை
கொடுத்துச் செல்லும் பொழுதும்
இதயத் துடிப்பு வேகத்தின் அதிகரிப்பு!
பலரின் எதிர்பார்ப்பின்,சந்தோசத்தின்
மத்தியில் உலகினிற்கு வரும் நாம்
மீண்டும்,
பலரின் சோகத்தின்,ஏங்கலின்
மத்தயில் உலகினை விட்டுச் செல்கின்றோம்!
எதனையோ சாதிக்கும் பல
துளிக் கனவுகளுடன் பிறக்கும் நாம்
திடீரென எதனையும் கொள்ளாது சில
மணித் துளிகளினில் இறந்துவிடுகின்றோம்!
சிலர் செய்த நன்மைகள் கல்வெட்டுக்களாய்,
பலர் செய்த நன்மைகளும் தீமைகளும்
அவர்கள் உலகினில் இல்லாதுவிடினும்
வாழ்ந்து மெல்லச் சாகும்!
இவர்கள் எம்முள் விதைத்துச்
சென்ற நினைவுகளுடன்,
வாழும் நாமும்,
ஒரு காலத்து நிழல்களே!
உலகினுற்குப் பிரியாவிடை
கொடுத்துச் செல்லும் பொழுதும்
இதயத் துடிப்பு வேகத்தின் அதிகரிப்பு!
பலரின் எதிர்பார்ப்பின்,சந்தோசத்தின்
மத்தியில் உலகினிற்கு வரும் நாம்
மீண்டும்,
பலரின் சோகத்தின்,ஏங்கலின்
மத்தயில் உலகினை விட்டுச் செல்கின்றோம்!
எதனையோ சாதிக்கும் பல
துளிக் கனவுகளுடன் பிறக்கும் நாம்
திடீரென எதனையும் கொள்ளாது சில
மணித் துளிகளினில் இறந்துவிடுகின்றோம்!
சிலர் செய்த நன்மைகள் கல்வெட்டுக்களாய்,
பலர் செய்த நன்மைகளும் தீமைகளும்
அவர்கள் உலகினில் இல்லாதுவிடினும்
வாழ்ந்து மெல்லச் சாகும்!
இவர்கள் எம்முள் விதைத்துச்
சென்ற நினைவுகளுடன்,
வாழும் நாமும்,
ஒரு காலத்து நிழல்களே!
Sunday, November 7, 2010
ஆணின் ஏமாற்றம்
"அன்னையின் மடியில் தவழ்ந்து,
ஆண்டுகள் பல வளர்ந்து,
இன்பங்களால் நெஞ்சம் நெகிழ்ந்து,
ஈர் பத்தாண்டுகள் கழிந்து,
உன் முகம் பார்த்துத் திளைத்து,
ஊர் அறிய ஒன்றாய்த் திரிந்து,
என்னுடன் நீ வருவாய் என உறுதி பூண்டு,
ஏக்கங்கள் பல தந்து,
ஐம் புலனும் உனக்காய் துடித்தபின்,
ஒரு வார்த்தை சொன்னாய், "வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்"
ஓய்ந்தது என் வாழ்க்கை ஒரு நொடியில்,
ஔடதம் தேடவோ இன்று உன்னால் உடைந்த நெஞ்சத்திற்கு".......
ஆண்டுகள் பல வளர்ந்து,
இன்பங்களால் நெஞ்சம் நெகிழ்ந்து,
ஈர் பத்தாண்டுகள் கழிந்து,
உன் முகம் பார்த்துத் திளைத்து,
ஊர் அறிய ஒன்றாய்த் திரிந்து,
என்னுடன் நீ வருவாய் என உறுதி பூண்டு,
ஏக்கங்கள் பல தந்து,
ஐம் புலனும் உனக்காய் துடித்தபின்,
ஒரு வார்த்தை சொன்னாய், "வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்"
ஓய்ந்தது என் வாழ்க்கை ஒரு நொடியில்,
ஔடதம் தேடவோ இன்று உன்னால் உடைந்த நெஞ்சத்திற்கு".......
விடியல்
"காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன,
உறவுகள் மாறிக்கொண்டிருக்கின்றன,
பருவங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன,
ஆனால் மனிதனின் பிரிவினைகள் மட்டும் மறாமலிருக்கின்றன!
பிறரைவிட உயர்ந்திருக்க வேண்டும் என்று,
போராடி உயர்ந்து கொண்டே போகின்றான்,
பொறாமை,வஞ்சனைகளும் உயர்ந்து கொண்டேபோகின்றன,
கீழோரைக் கைகொடுத்து முன்கொணர எவரும் இல்லை!
சாதிகள் சொல்கிறார்கள்,
சமயங்கள் சொல்கிறார்கள்,
சாஸ்திரங்கள் பார்க்கிறார்கள்,
சாவினை எவரும் என்றென்று சொல்வார்களா?
மனிதாபிமானம் இல்லாத மனித ஜாதி,
மட்டம் தட்டுதலே அதன் குறி,
மரணத்தின் பின்,
மண் மட்டுமே சொந்தம் என்று தெரிந்தும் ஓயாது அலைகின்றது!
அளவுகடந்த சொத்துடன் ஒரு பிரிவு,
அன்னமே பெறாத ஒரு பிரிவு,
பிணங்களாய் மண்ணில் வீழும் வரை,
பிரிவினைக்கு மட்டும் பிரிவில்லை!
அன்பினை வழங்குங்கள் என்றுதான்,
அனைத்து மதமும் இயம்புகின்றன,
அதனை வளங்கமாட்டீர்,
ஆலயங்களை மட்டும் அமைப்பீரோ!
கதைகள் பல பேசுவார்,
கண்ணால் காணாவிடினும்!
வாழ்நாள் கொஞ்சமே,ஆனால் சேர்த்த,
வஞ்சனைகள் வானை மிஞ்சுமே!
கதைகள் பல பேசுவார்,
கண்ணால் காணாவிடினும்!
வாழ்நாள் கொஞ்சமே,ஆனால் சேர்த்த,
வஞ்சனைகள் வானை மிஞ்சுமே!
என்று மனங்கள் ஒன்றுபட்டு,
மனித இனங்கள் ஒன்றுபடுகின்றனவோ
அன்றுதான் உலகிற்கு
உண்மையான விடியல்!!!......
வேதனை
"பல வருடங்கள் சேமித்த அறிவினால் உயர்ந்து,
அதிலே,தெளிந்து,
பட்டங்கள் பல பெற்றுச் சிறந்து,
பலருக்குப் பெருமை தர உவந்து,
பள்ளிக்கு வழி காட்ட முயன்று,
பள்ளிகாய் வாழ் நாளினை துறந்த,
ஒரு வழிகாட்டியின் பாதை,
ஒரு சிறு துப்பாக்கி முனையால் வழி தவறிப்போனதோ!......
அதிலே,தெளிந்து,
பட்டங்கள் பல பெற்றுச் சிறந்து,
பலருக்குப் பெருமை தர உவந்து,
பள்ளிக்கு வழி காட்ட முயன்று,
பள்ளிகாய் வாழ் நாளினை துறந்த,
ஒரு வழிகாட்டியின் பாதை,
ஒரு சிறு துப்பாக்கி முனையால் வழி தவறிப்போனதோ!......
Saturday, November 6, 2010
நட்பின் ஏக்கம்......
"நாம் சந்தித்து மூன்று வருடங்கள் தான் ஆகிறது ,
ஆனால் நம் நட்பு முன்ஜென்மப்பந்தமோ என்னமோ!
என் வாழ்வின் பாதையில் பல நட்பின் கால் தடங்கள்,
உனது மட்டும் சற்று ஆளமாய்,
என் நெஞ்சில் நீங்காத பாரங்கள் பல,
உன்னால் நீங்கியவையும் பல,
என் சிந்தனையையும் உன் சிந்தனையையும் ஒன்றாகப் படைத்த இறைவன்,
என்றும் நாம் கைகோர்த்து நம் வாழ்வின் எல்லை வரை பயணிக்க வழிவகுத்திருப்பனோ!!!....
பிரிவினை
"சிலர் உணவின் பின் decet உண்கிறார்கள் ,
ஆனால்,
பலர் இங்கு உணவில்லாமல் desert வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்".......
Subscribe to:
Posts (Atom)






