Monday, November 8, 2010

நிழல்கள்

"ஒவ்வொரு உறவும்
உலகினுற்குப் பிரியாவிடை
கொடுத்துச் செல்லும் பொழுதும்
இதயத் துடிப்பு  வேகத்தின் அதிகரிப்பு!

பலரின் எதிர்பார்ப்பின்,சந்தோசத்தின்
மத்தியில் உலகினிற்கு வரும் நாம்
மீண்டும்,
பலரின் சோகத்தின்,ஏங்கலின்
மத்தயில் உலகினை விட்டுச் செல்கின்றோம்!

எதனையோ சாதிக்கும் பல
துளிக் கனவுகளுடன் பிறக்கும் நாம்
திடீரென எதனையும் கொள்ளாது சில
மணித் துளிகளினில் இறந்துவிடுகின்றோம்!

சிலர் செய்த நன்மைகள் கல்வெட்டுக்களாய்,
பலர் செய்த நன்மைகளும் தீமைகளும்
அவர்கள்  உலகினில் இல்லாதுவிடினும்
வாழ்ந்து மெல்லச் சாகும்!

இவர்கள் எம்முள் விதைத்துச்
சென்ற நினைவுகளுடன்,
வாழும் நாமும்,
ஒரு காலத்து நிழல்களே!

1 comment:

  1. //எதனையோ சாதிக்கும் பல
    துளிக் கனவுகளுடன் பிறக்கும் நாம்
    திடீரென எதனையும் கொள்ளாது சில
    மணித் துளிகளினில் இறந்துவிடுகின்றோம்!// சிந்திக்க மட்டுமல்ல இதயத்தை கனக்க வைக்கும் வரிகளும் கூட!!! காலத்தின் நிழல்களாக நாங்களும்!!!

    ReplyDelete